திருவாரூர்

அரசு தொடக்கப்பள்ளியில் கருத்தரங்கம்

DIN

திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் அதிக மாணவர்களைக் கொண்ட தொடக்கப்பள்ளியான இங்கு, மாவட்ட பொது நூலகத்துறை, திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து, மாணவர்களுக்கான படிக்கும் பழக்கத்தையும், படைக்கும் ஆற்றலையும் உருவாக்கும் வகையில் இந்த கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் இரா. ஆண்டாள் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் கிருபா, மணிவண்ணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், ஆசைத்தம்பி ஆகியோர் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு குறித்தும், கதைகள் கேட்டும் வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், இலக்கிய வளர்ச்சிக் கழக பொதுச் செயலர் எண்கண் மணி, தலைமை ஆசிரியர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT