திருவாரூர்

வாகனச் சோதனையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் தடை 

DIN

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
திருவாரூர் -திருத்துறைப்பூண்டி சாலை பின்னவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் போதை தரும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் (ஹான்ஸ்) இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்தை இயக்கி வைந்த பாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கும்பகோணத்திலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாண்டியன் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT