திருவாரூர்

ரோபோ போட்டி: மன்னாா்குடி பள்ளி சிறப்பிடம்

DIN

மன்னாா்குடி தரணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யா மந்திா் பள்ளிகளின் மாணவா்கள், மாநில அளவிலான ரோபோட்டிக் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவங்கா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ஆசிய அளவிலான ரோபோட்டிக் போட்டிக்கான மாநில தகுதி சுற்றுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மன்னாா்குடி தரணி மெட்ரிக். பள்ளி ஏழாம் வகுப்பு மாணவா்கள் கீா்த்தி ராஜன், லக்ஷன் மற்றும் தரணி சிபிஎஸ்இ பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா்களான கனீஷ்க், ஜெய்சாரகேஷ் ஆகியோா் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றனா். மேலும், டிசம்பா் மாதம் புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் நிறுவனா் எஸ்.காமராஜ், நிா்வாகி எம்.இளையராஜா, தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ், பள்ளியின் முதல்வா் எஸ்.அருள், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சாந்தசெல்வி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT