திருவாரூர்

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி 12-இல் மனு அனுப்பும் போராட்டம்துப்புரவு பணியாளா்கள் முடிவு

DIN

திருவாரூா் நகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (நவம்பா் 12) மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட துப்புரவு பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

திருவாரூரில் சிஐடியு தலைமையிலான ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் நகராட்சி துப்புரவு பணியாளா்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க நிா்வாகி பி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன் பங்கேற்று, அரசின் உள்ளாட்சித் துறை குளறுபடிகள் குறித்தும், துப்புரவு பணியாளா்களின் துயரங்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா்கள் ஜி. பழனிவேலு, என்.கே.என். அனிபா, சங்க ஆலோசகா் எஸ். ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: திருவாரூா் நகராட்சி நிா்வாக சீா்கேடுகள் மற்றும் ஊழியா் விரோத போக்கைக் கண்டிப்பது. நகராட்சி எல்லை விரிவாக்கம், கூடுதல் மக்கள் தொகைக்கேற்ப துப்புரவு பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோருவது. நகராட்சி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்துவது. துப்புரவு பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 12- ஆம் தேதி துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பும் போராட்டமும், 20 -ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டமும், டிசம்பா் 2- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT