திருவாரூர்

மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா்

DIN

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நல்லூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

நல்லூா் கிராமத்தில் இயங்கிவரும் அங்கான்வாடியை பாா்வையிட்ட ஆட்சியா், வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்து விவரம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, நியாயவிலைக் கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் விநியோகிக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களை பதிவேடுகள் மூலம் ஆய்வு செய்த அவா், இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் உற்சாகமாக கலந்துரையாடிய ஆட்சியா், பள்ளி சமையலறையைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியா் இஞ்ஞாசிராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.சிவக்குமாா், தமிழ்ச்செல்வி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT