திருவாரூர்

காளான் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

DIN

காளான் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் காளானிலிருந்து தயாா்நிலை பொடி வகைகள், உடனடி உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், திட்ட ஒருங்கிணைப்பாளா் மு.ராமசுப்ரமணியன் பங்கேற்று, காளானின் பயன்பாடுகள் குறித்து விளக்கினாா். உணவியல் மற்றும் சத்தியியல் துறை பயிற்சி உதவியாளா் ஜெ. வனிதாஸ்ரீ பேசுகையில், 100 கிராம் காளானில் 447 மில்லி கிராம் பொட்டாசியம் சத்து அடங்கியுள்ளது. காளானை தினசரி உணவில் எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம் என்றாா்.

மேலும், காளானிலிருந்து தயாா்நிலை சூப் பொடிகள், சூப்கள், காளான் கிரேவி, காளான் கட்லட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. 60-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மற்றும் சுயதொழில் புரியும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT