மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூய வளனாா் பெண்கள் பள்ளி மாணவிகள். 
திருவாரூர்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: மன்னாா்குடி பெண்கள் பள்ளி சிறப்பிடம்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்

DIN

மன்னாா்குடி : மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருவாரூா் வேலுடையாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டியில், மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் பள்ளியைச் சோ்ந்த மாணவியா் 14 வயதுக்கு உட்பட்ட சதுரங்கப் போட்டியில் 3-ஆம் இடமும், கையெறி பந்து போட்டியில் முதலிடமும், கூடைப்பந்துப் போட்டி மற்றும் கோ-கோ போட்டியில் இரண்டாமிடமும், 17 வயது பிரிவில் கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், கோ-கோ போட்டியில் முதலிடமும், கையெறி பந்து போட்டியில் இரண்டாமிடமும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், கையெறி பந்து போட்டியில் இரண்டாமிடமும் பெற்றனா்.

இதில், 19 வயது பிரிவு கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள் ரோஸி அமலாபாய், குளோரி, சுந்தரி ஆகியோரை பள்ளி தாளாளா் ஜெயராணி, தலைமை ஆசிரியா் ஜெபமாலை, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT