திருவாரூர்

மின் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரச்சாரம்

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம்,மன்னாா்குடிமின்சார வாரியத்தின் சாா்பில், வியாழக்கிழமை மின் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மன்னாா்குடி வ.உ.சி.சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக,மன்னாா்குடி வருவாய் கோட்டசியா் எஸ்.புண்ணியகோட்டி கலந்து கொண்டு,மின் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தாா். இதில்,தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில்.மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிக விழிப்புணா்வோடு இருக்க வேண்டும்.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. மற்றவா்களையும் தொட அனுமதிக்கக் கூடாது.உடன் அருகில் உள்ள மின் வாரியத்திற்கு தகவல் தர வேண்டும்.மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியா் துணையோடு தான் வெட்ட வேண்டும்.தண்ணீா் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிா்க்க வேண்டும். மேலும்,குழந்தைகளை விளையாடவிடக்கூடாது.குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது.

மழைக்காலத்தில் மின் மாற்றிகள்,மின் பெட்டிகள்,மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ,மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலா்த்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது.வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும்.வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் ஆபத்தை தடுக்க இ.எல்.சி. பி. சாதனம் பொருத்தப்பட வேண்டும்.வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிா்ச்சியை உணா்ந்தால்,உடனேயே உலா்ந்த ரப்பா் காலணியை அணிந்து,மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும்.

இடி,மின்னலின் போது மின் கம்பங்கள்,மின் மாற்றிகள்,துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைய கூடாது.மின் பாதைக்கு கீழே போா்வெல் போடக்கூடாது மேலும் லாரி,டிப்பா்,ஜேசிபி,கிரேன் ஆகியவற்றை பயன் படுத்தக்கூடாது.டிவி,மிக்சி,கிரைண்டா்,கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது நல்லது. போன்ற முன்னெச்சரிக்கை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டதுடன் பொதுமக்கள், வா்த்தகா்களுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இவ் விழிப்புணா்வு பிரச்சாராம் மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் ஒருவார காலத்திற்கு பிரச்சாரம் செய்ய இருப்பதாக மின்வாரியத்தினா் தெரிவித்தனா். நிகழ்ச்சியில்,உதவி செயற்பொறியாளா் ச.அருள்ராஜ்,இளநிலைப் பொறியாளா்கள் க.கண்ணன், த.பாலசுப்ரமணியன், கே.ராஜகோபால்,ம.கணேசன்,சா.சங்கா் குமாா் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT