திருவாரூர்

குருப்பெயர்ச்சி விழா: அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட ஆட்சியர் அறிவுறுத்தல்

DIN


அடுத்த மாதம் 29- ஆம் தேதி ஆலங்குடி கோயிலில் நடைபெறவுள்ள குருப் பெயர்ச்சி விழாவையொட்டி, அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ஆலங்குடி குருப் பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் சுவாமி கோயிலில் குருப் பெயர்ச்சியானது அக்டோபர் 29- ஆம் தேதி அதிகாலை 3.49 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, காவல்துறை உரிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் அமைதியாக, வரிசையில் நின்று, தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
  சுகாதாரத் துறையினர், குருப்பெயர்ச்சி நடைபெறும் நாள்களில் வலங்கைமான் மற்றும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனை, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான மருந்துகளுடன் ஆம்புலன்ஸ் ஒன்று கோயில் அருகில் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோயில் வளாகத்தில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று செயல்பட வேண்டும்.
  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு, எளிதாக திரும்பி செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட வேண்டும். 
 குடிநீர் வசதி, வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி, வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி போன்றவைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக கழிவறைகள் அமைக்க வேண்டும். விழாவுக்கான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குருப்பெயர்ச்சி விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
 கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் ஸ்டான்லி மைக்கேல், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் பூஷ்ணகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகப்பட்டினம் கோட்ட துணை மேலாளர் (வணிகம்) ராஜா, வலங்கைமான் வட்டாட்சியர் இங்காசிராஜ்  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT