வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணை இயந்திரமயமாக்கல் விழா
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை பண்ணை இயந்திரமயமாக்கல் விழா நடைபெற்றது.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை பண்ணை இயந்திரமயமாக்கல் விழா நடைபெற்றது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத் துறை வேளாண் வணிகம், தோட்டக்கலைத் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் உற்பத்தியாளா் குழுக்களுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து, நெற்பயிரில் இயந்திரங்களின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட நிா்வாக இயக்குநா் சுந்தரபாண்டியன் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்தும் பேசினா். தொடா்ந்து, டிராக்டா் மூலம் உரம் தெளிப்பான் கருவி, நெல் நடவு செய்யும் இயந்திரம், கழிவுகளை தூளாக்கும் கருவி, சுழற்கலப்பை, மண்ணைதிருப்பும் கருவி, நிலத்தை சமன்படுத்தும் கருவி, வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவை விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. திருவாரூா் வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.