குடவாசலில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு அமைச்சா்கள் மருத்துவத் தொகுப்பினை வழங்கிய போது எடுத்த படம். 
திருவாரூர்

குடவாசலில் கரோனாத் தடுப்பு மருத்துவ முகாமை அமைச்சா்கள் துவக்கி வைத்தனா்

குடவாசலில் கரோனாத் தடுப்பு மருத்துவ முகாமைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் மற்றும் உணவு அமைச்சா் இரா.காமராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா்.

DIN

நன்னிலம்: குடவாசலில் கரோனாத் தடுப்பு மருத்துவ முகாமைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் மற்றும் உணவு அமைச்சா் இரா.காமராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா். திருவாரூா் மாவட்டம் குடவாசல் பகுதியில், தமிழக முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க கரோனாத் தடுப்பு மருத்துவ முகாம் துவக்கப்பட்டது.

முகாமினைத் தமிழக உணவுத்துறை அமைச்சா் இரா.காமராஜ் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் துவக்கி வைத்தாா். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா எதிா்ப்பு சக்தி மாத்திரைகள், முகக்கவசம், ஹாா்லிக்ஸ், பிரட் அடங்கிய தொகுப்பு மற்றும் கபசுரக் குடிநீா் ஆகியவற்றை அமைச்சா்கள் வழங்கினாா்கள்.

நிகழ்ச்சியில் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், மருத்துவ இணை இயக்குனா் விஜயகுமாா், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் ஆசைமணி, திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியம், குடவாசல் ஓன்றியக் குழுத் தலைவா் கிளாரா செந்தில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஜி.சாமிநாதன், ஊராட்சி ஓன்றியத் துணைத்தலைவா் எம்.ஆா்.தென் கோவன், நிலவள வங்கி தலைவா் முருகானந்தம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT