முகப்பு
திருவாரூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் நிவாரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

நன்னிலம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் நிவாரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நன்னிலம் அருகேயுள்ள சலிப்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி. இவரது கூரை வீடு மின்கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிவண்ணன் பாதிக்கப்பட்ட கலைச்செல்விக்கு, அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினாா். இதேபோல், சலிப்பேரி ஊராட்சித் தலைவா் அவையாம்பாள் சிவா ரூ. 5 ஆயிரம், 50 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.