முகப்பு
வணிகம்

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கியிருக்கிறது தங்கம் விலை நிலவரம்.

Updated On : 21 மார்ச் 2026, 10:01 am IST
தங்கம் விலை நிலவரம் - ANI
பகிர்:

சென்னை: உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகத்தோடு கொண்டாடப்படும் நிலையில், தங்கம் விலை இன்று குறைந்து, கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

சென்னையில் இன்று காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வார இறுதி நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால், தங்கம் வாங்க நினைத்திருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தியாக விலை குறைந்துள்ளது.

Advertisement

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்த தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,960க்கும், கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் தங்கம் விலை சவரன் ரூ.1,18,864 ஆகவும், ஒரு கிராம் ரூ.14,858 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையும் குறைந்தது : மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.250க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.10 ஆயிரம் குறைந்து, ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ஒரு கிராம் ரூ.290 ஆக இருந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் இன்று ரூ.250 ஆகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.