தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் (நவ. 25)!
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து...

தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலர் மதிப்பு ஆகியவற்றால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
பல நாள்களாக சவரன் ரூ. 1 லட்சத்துக்கு மேல் நீடித்த தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகக் அதிரடியாகக் குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, வாரத்தின் தொடக்க நாள்களான திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சற்று உயர்ந்தது.
Advertisement
Advertisement
அதன்படி, சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு சவரனுக்கு ரூ. 920 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ. 93,720 -க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று (நவ. 25) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 295 குறைந்து, ஒரு கிராம் ரூ. 11420-க்கும் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,360-க்கும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.