முகப்பு

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 24)

இன்று (நவ. 24) தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 24)
தங்கம் விலை - பிடிஐ
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்று (நவ. 24) உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தில் நேற்று (திங்கள்) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,080 உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 115 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,715 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

சவரனுக்கு ரூ. 920 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ. 93,720 -க்கு விற்பனையாகிறது.

கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 15,000 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து வருவது மக்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 175-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

summary

Chennai, Tamilnadu live gold and silver rate today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.