இன்று தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் (அக். 16)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ. 1,08,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 960 குறைந்தது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 280, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 760, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 600 குறைந்தது.
கடந்த 4 நாள்களில் தங்கம் விலை ரூ. 2,920 சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 16, வெள்ளிக்கிழமை) விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
ஒரு சவரன் ரூ. 1,08,120 -க்கும் ஒரு கிராம் ரூ. 13,515 -க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 240 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold and silver rate today in chennai, Tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.