தங்கம், வெள்ளி விலை குறைந்தது: அக்.12 நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 1,10,720 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
சென்னையில் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை(அக். 12) காலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.13,840-க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 1,10,720 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி வெள்ளி விலை கிராம் ரூ. 245-க்கும், கிலோ ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
chennai gold and silver rate today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.