தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் (நவ. 26)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 26) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த வாரங்களில் கணிசமாகக் குறைந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
இந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,080, செவ்வாய்க்கிழமை ரூ. 920 உயர்ந்த நிலையில் நேற்று (புதன்) சவரனுக்கு ரூ. 2,360 குறைந்துள்ளது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,540 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ. 92,320 -க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்த போதிலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.