FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலை? (நவ. 6)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தங்கம், வெள்ளி விலை... - ENS
பகிர்:

கடந்த நான்கு நாளாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று (நவ. 6) காலை மாற்றமின்றி விற்பனையான நிலையில் வர்த்தகத்தின் இடையே குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்துவந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் கடந்த 4 நாள்களும் உயர்ந்தது.

Advertisement

Advertisement

இன்று காலை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு சரிந்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 6, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,960 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ. 245 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,140 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோன்று வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 205 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.05 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.