தங்கம் விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (அக். 22)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 22, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்தது.
தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. இந்த வாரம் திங்கள்கிழமை மாற்றமின்றி விற்பனையான நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.
இன்றைய தங்கம் விலை
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி தங்கம் கிராமுக்கு ரூ.155 குறைந்து, ரூ.13,235-க்கும், சவரனுக்கு ரூ. 1,240 குறைந்து, ரூ. 1,05,880 -க்கு விற்பனையானகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 225 -க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சா்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவுக்கு, அமெரிக்க டாலா் மதிப்பு, அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.