முகப்பு

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (நவ. 28)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

29 வினாடிகள் முன்பு
தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (நவ. 28)
தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 28) சவரனுக்கு ரூ. 400 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

எனினும் இந்த வாரம் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,080 -ம், செவ்வாய்க்கிழமை ரூ. 920 -ம் உயர்ந்த நிலையில் புதன்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,360 குறைந்தது.

வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்த நிலையில் நேற்று (வெள்ளி) காலை, மாலை சேர்த்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்தது.

கடந்த இரு நாள்கள் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

இன்று (நவ. 28, சனிக்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,720 -க்கும் சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 93,760 -க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 170 -க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,70,000 -க்கும் விற்பனையாகிறது.

summary

Gold and Silver Price today in chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.