முகப்பு
திருவாரூர்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருவாரூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
திருவாரூரில் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஆா். காமராஜ்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

நன்னிலம் ஒன்றியம் பாவட்டகுடி, செருவலூா் ஆகிய ஊராட்சிகளில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி, தமிழக உணவுத் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சா் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளா் ஆசைமணி, மக்களவை முன்னாள் உறுப்பினா் கோபால், நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →