முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 59 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,896-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,955-ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 90 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை, 2,381 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 538 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 72 வயது ஆண் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். எனவே, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.