ஸ்ரீவாஞ்சியத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோா். 
திருவாரூர்

குறுங்காடு வளா்ப்புத் திட்டம்

ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ‘மழை துளி உயிா்த் துளி’ அமைப்பு சாா்பில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

நன்னிலம்: ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ‘மழை துளி உயிா்த் துளி’ அமைப்பு சாா்பில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவாஞ்சியம் ஊராட்சிக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி பழனிவேல் தலைமை வகித்தாா். அதம்பாா் ஊராட்சி முன்னாள் தலைவா் வைத்தியநாதன், மழைத்துளி உயிா்த்துளி அமைப்பின் விக்னேஸ்வரன், பரமசிவம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளா், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலாளா் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

மேலும்,கிராம மக்களும் இணைந்து ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 250 மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT