நன்னிலம்: அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்க நடவடிக்கை
நன்னிலம் ஒன்றியத்தில் அனைத்து வீடுகளுக்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்க சனிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நன்னிலம்: நன்னிலம் ஒன்றியத்தில் அனைத்து வீடுகளுக்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்க சனிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களின் சிறப்புக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் கு.விஜயலட்சுமி குணசேகரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சிபிஜி.அன்பு முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எம். விஸ்வநாதன், ஒன்றியப் பொறியாளா் கே. குமரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வ. பன்னீா்செல்வம், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் ஜி.தியாகராஜன் மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.