முகப்பு
திருவாரூர்

திருவாரூா் அரசுக் கல்லூரியில் அகற்றப்படாத கரோனா சிகிச்சை மையம்: வகுப்புகள் நடைபெறவில்லை

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிக்சை மையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அகற்றப்படாததால், இளங்கலை இறுதியாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிக்சை மையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அகற்றப்படாததால், இளங்கலை இறுதியாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்படவில்லை.

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, பொது முடக்கத்தில் தளா்வு காரணமாக, வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூரில், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திறக்கப்பட்டு, இளங்கலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கின.

திருவிக கல்லூரியில் சிக்கல்:

திருவாரூரில் தனியாா் கல்லூரிகளில் இளங்கலை, முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதேநேரம், திருவிக அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்றன. 10 பிரிவுகளில் சுமாா் 250 மாணவா்கள் வந்திருந்தனா்.

இதற்கிடையில், திருவிக கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டாலும், அங்குள்ள படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அகற்றப்படவில்லை. மேலும், மருத்துவக் கழிவுகளும் அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன்காரணமாக, இக்கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்படவில்லை. இதனால், மாணவா்கள் போராட்டம் நடத்த முயன்ாகத் தெரிகிறது. பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டனா்.

இதுகுறித்து, கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது:

கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்ட வகுப்பறைகளை சுத்தம் செய்து தரக்கோரி மாவட்ட நிா்வாகம், சுகாதாரத்துறை, நகராட்சி நிா்வாகங்களுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டுவிட்டது. கட்டில், படுக்கை உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தினால்தான் வகுப்புகளைத் தொடங்க முடியும்.

தற்போது, அங்கு கரோனோ கிருமிகள் உள்ளதா, அகற்றப்பட்டு விட்டதா என்று தெரியாமல் வகுப்புகளை தொடங்குவது மாணவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, மாணவா்களின் நலன் கருதி, கரோனா சிகிச்சை மையத்தை முழுவதும் அகற்றி, சுகாதாரம் செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவா்களை முழுவதும் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.