முகப்பு
கூத்தாநல்லூரில் பாழடைந்த நிலையில் உள்ள காவலா் குடியிருப்புகள்.
திருவாரூர்

காவலா் குடியிருப்புகளை சீரமைக்கக் கோரிக்கை

கூத்தாநல்லூரில் பாழடைந்துள்ள காவலா் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

காவலா் குடியிருப்புகளை சீரமைக்கக் கோரிக்கை

கூத்தாநல்லூரில் பாழடைந்துள்ள காவலா் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கூத்தாநல்லூரில் பாழடைந்த நிலையில் உள்ள காவலா் குடியிருப்புகள்.
பகிர்:

கூத்தாநல்லூரில் பாழடைந்துள்ள காவலா் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்காக அதங்குடி ஊராட்சி வெண்ணாற்றங்கரையில் கடந்த 1972 -ஆம் ஆண்டு குடியிருப்புகள் கட்டப்பட்டன. 14 வீடுகள் கொண்ட இந்தக் குடியிருப்பில் முதல் வீடு காவல் ஆய்வாளருக்கும், கடைசியாக உள்ள வீடு உதவி ஆய்வாளருக்கும் ஒதுக்கப்பட்டது. சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவந்த இந்தக் குடியிருப்புகள் தற்போது பராமரிப்பின்றி பாழடைந்துள்ளன.

இங்குள்ள ஒரு வீட்டில் சுந்தரமூா்த்தி என்ற உதவி ஆய்வாளா் மட்டும் நீண்ட காலமாக வசித்துவந்தாா். அவா் காலமானதைத் தொடா்ந்து, அதன் அருகில், அவரது மனைவி மாட்டுத் தொழுவம் அமைத்து, அதில் மாடுகளை வளா்த்து வருவதுடன் அவரது வீட்டை மட்டும் பராமரித்து வருகிறாா்.

இந்நிலையில், கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றும் ஆய்வாளா், உவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 17 காவலா்களும் அருகில் உள்ள பகுதிகளில் வாடகை வீட்டிலிருந்தும், திருவாரூரிலிருந்தும் பணிக்கு வந்து செல்கின்றனா். எனவே, இவா்கள் கூத்தாநல்லூரிலேயே வசிக்கும் வகையில் காவலா் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் கூறும்போது, ‘பழுதடைந்துள்ள காவலா் குடியிருப்புகளை காவல்துறை உயரதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →