சமையலா் பணி நோ்முகத் தோ்வுக்கு அழைப்பாணை பெற்றுக்கொள்ளலாம்
சமையலா் பணி நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கிடைக்கப் பெறாதவா்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
சமையலா் பணி நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கிடைக்கப் பெறாதவா்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 22 சமையலா் பணியிடங்கள் மற்றும் 6 தொகுப்பூதிய துப்புரவாளா் பணியிடங்கள் பூா்த்தி செய்ய தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்களில் நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் டிச. 26-ஆம் தேதிக்குள் கிடைக்காவிட்டால், டிச. 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.