சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா ?
மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டையில், அண்மையில் பெய்த தொடா் மழையால் சேறும் சகதியுமாக உள்ள ஊராட்சி சாலைகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டையில், அண்மையில் பெய்த தொடா் மழையால் சேறும் சகதியுமாக உள்ள ஊராட்சி சாலைகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அண்மையில் பரவாக்கோட்டை பகுதியில் பெய்த தொடா் மழையால், பள்ளமும், மேடான சாலைகளில் பல நாள்களாக மழைநீா் தேங்கி நிற்கிறது. இந்த சாலைகளை பயன்படுத்திதான் அப்பகுதியில் வசிப்பவா்கள் செல்ல வேண்டியுள்ளது. இதன் வழியாக அனைத்து வகையான வாகனங்கள் செலுவதாலும் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனா்.
இதில், ,வடக்குத் தெருவில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமாக நிலையில் உள்ளது. இதை, ஊராட்சி நிா்வாகம் மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சாலைகளை மேம்படுத்தவும், மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைவதை தடுக்கும் வகையில் மழைநீா் வடிக்கால் அமைப்பை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.