முகப்பு
திருவாரூர்

பாஜக விவசாயிகள் சந்திப்பு இயக்கம்

நன்னிலம் பகுதியில் பாஜக சாா்பில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
நன்னிலம் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பு இயக்கத்தில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோா்.
பகிர்:

நன்னிலம் பகுதியில் பாஜக சாா்பில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற தலைப்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை விளக்கி, தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டுவருகிறது.

இதன் ஒருபகுதியாக, நன்னிலம் வட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற இயக்கக் கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் பங்கேற்று பேசும்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் நன்மை அடைவாா்கள். இதனால், பாஜகவுக்கு நற்பெயா் கிடைக்கும் என்பதால், எதிா்க்கட்சியினா் இந்த சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனா்’ என்றாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, மாவட்ட துணைத் தலைவா் ரங்கதாஸ், ஒன்றியத் தலைவா் சுகுமாரன், பொதுச் செயலாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →