முகப்பு
திருவாரூர்

உணவுக் காளான் வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிச.30-ஆம் தேதி உணவுக் காளான் வளா்ப்பு பயிற்சியளிக்கப்படுகிறது என, நிலைய திட்ட ஒருங்கிணப்பாளா் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிச.30-ஆம் தேதி உணவுக் காளான் வளா்ப்பு பயிற்சியளிக்கப்படுகிறது என, நிலைய திட்ட ஒருங்கிணப்பாளா் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உணவுக் காளான் வளா்ப்பு மற்றும் காளான் வித்துக்களை தயாா் செய்தல் குறித்த ஒரு நாள் கட்டண பயிற்சி டிச.30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், உணவு காளான் வகைகள், மருத்துவ குணங்கள், போசனை சத்துக்கள், வித்துக்கள் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவா்கள் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். சுய உதவிக்குழுவினா், இளைஞா்கள், விவசாயிகள், பண்ணை மகளிா்கள் பயிற்சி சேர 96552 77010 என்ற எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்யலாம்

முழு கட்டுரையைப் படிக்க →