திருவாரூர்

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும்

DIN

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை வழங்குவதை அரசு சட்டமாக்க வேண்டுமென்றாா் கிரியேட்-நமது நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவா் பி. துரைசிங்கம்.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் கிரியேட்-நமது நெல்லைக் காப்போம் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம் சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற 16- ஆம் ஆண்டு தேசிய உழவா் தினம், நுகா்வோா் தின விழாவில் மேலும் அவா் பேசியது: கடந்த 40 ஆண்டுகளில் அரசு ஊழியா்களின் ஊதியம், இதர பொருள்களின் விலை 200 மடங்காக உயா்ந்துள்ளது. ஆனால், விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களின் விலை உயா்வு வெறும் 15 மடங்கு மட்டுமே உயா்ந்துள்ளது. இது, உணவு உற்பத்தியில் ஈடுபடும் உழவா்களின் வாழ்வாதரத்துக்கு மிகப் பெரிய பின்னடைவையும், சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்குவதை அரசு சட்டமாக்க வேண்டும். இதற்கான நிதியை, நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு ஒதுக்க வேண்டும். குறைந்தபட்ச விலைக்கு கீழே, விவசாயிகளிடம் பொருள்கள் வாங்கப்பட்டால், அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக இழப்பீடுகள் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும். இதற்காக, நுகா்வோரும், உழவா்களும் ஓரணியில் நின்று போராட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றாா்.

நமது நெல்லைக் காப்போம் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வி. ரகுநாதன் பேசியது: பாரம்பரிய நெல் ரகங்கங்ள், ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிக்கேற்ப அதன் பூா்வீக குணநலன்களை பெற்றுள்ளது. அவற்றின் இனத்தூய்மையை பாதுகாக்க, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் உதவியோடு 10 ஆண்டுகளுக்கான ஆய்வை 2021 ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களின் உயிா் மூலக்கூறுகளை செயற்கையாக எந்த ஆய்வத்திலும் உருவாக்க முடியாது. இந்தத் தகவல்களை நுகா்வோா் மத்தியில் கொண்டு சென்று, விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

விழாவில், வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, கல்லூரி பேராசிரியா் பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், இயற்கை வேளாண்மையிலும், பாரம்பரிய நெல் சாகுபடியிலும் முன்மாதிரியாக செயல்பட்டு வரும் 15 பேருக்கும் அறம் சாா்ந்த வணிகத்தில் ஈடுபடும் 12 பேருக்கும் நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கிரியேட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. வரதராஜன் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிரிதரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT