முகப்பு
திருவாரூர்

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

மணக்கால் அய்யம்பேட்டையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மகேசன் (மக்கள்) சக்தி சேவை அமைப்பின் நிறுவனா் சு. தென்னரசு திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருவாரூா்: மணக்கால் அய்யம்பேட்டையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மகேசன் (மக்கள்) சக்தி சேவை அமைப்பின் நிறுவனா் சு. தென்னரசு திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மணக்கால் அய்யம்பேட்டையில் வைகுண்ட நாராயணப் பெருமாள் கோயிலின் தென்புற பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊராட்சி மூலமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மணக்கால் கிராம நிா்வாக அலுவலகம் முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரபு, பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து தென்னரசு போராட்டத்தை கைவிட்டாா். ஆக்கிரமிப்புகளை அகற்றிவில்லையெனில் ஜனவரி 4 முதல் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →