முகப்பு
வணிகம்

பங்குச்சந்தைக்கு மிக மோசமான வாரம்! இன்று மட்டும் ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!!

பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளது பற்றி...

Updated On : 13 மார்ச், 2026 at 11:33 AM
கோப்புப் படம்
பகிர்:

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக இன்று(மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,444.22 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை குறைந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,470.50(1.93%) புள்ளிகள் குறைந்து 74,563.92 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 488.05 (2.06%) புள்ளிகள் குறைந்து 23,151.10 புள்ளிகளில் நிலை பெற்றது.

இன்று மட்டும் 9.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 4 ஆண்டுகளில் பங்குச்சந்தைகளுக்கு இதுவே மிக மோசமான வாரம் என்று கூறப்படுகிறது.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.62 சதவீதம், 2.52 சதவீதம் சரிந்தன.

துறைவாரியாக, நிஃப்டி மெட்டல் 5 சதவீதம் சரிந்தது. காலையில் நிஃப்டி எப்எம்சிஜி குறியீடு மட்டும் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் வர்த்தக முடிவில் அனைத்துத் துறைகளும் சரிவில் முடிந்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிந்தும் வர்த்தகமாகின.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.25 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 100.7 டாலராக உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பங்குச்சந்தைகள் இன்று சரிந்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தொடர்ந்து 3 ஆவது வாரமாக சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் ரூ. 20 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Stock market crash: Sensex tanks 1470 pts, Nifty drops 2%

முழு கட்டுரையைப் படிக்க →