முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 2 மார்ச், 2026 at 11:38 AM
- IANS
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:27 AM

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 2) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,000 புள்ளிகளுக்குக் கீழ் தொடங்கியது. காலை 78,543.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ், காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,214.80 புள்ளிகள் குறைந்து 80,072.38 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 369.90 புள்ளிகள் குறைந்து 24,808.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 11:32 AM

நிஃப்டி 50 குறியீட்டில் லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வருகின்றன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.93 சதவீதம், 1.3 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

துறை குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ மிக மோசமான சரிவைச் சந்தித்தது. மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் குறியீடுகள் 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. நிஃப்டி மெட்டல் குறியீடு ஓரளவு லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

உலக நாடுகளிடையேயான போரால் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.

summary

Stock Market: Sensex loses 1,200 points, Nifty near 24,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.