முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 30 மார்ச், 2026 at 6:16 AM
பங்குச்சந்தை
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று(மார்ச் 30) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,565.22 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 989.71 புள்ளிகள் குறைந்து 72,603.89 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 285.95 புள்ளிகள் குறைந்து 22,533.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.28 சதவீதம், 2.32 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

துறைவாரியாக, நிஃப்டி வங்கி, நிஃப்டி பொதுத்துறை வங்கி, நிஃப்டி நிதிச் சேவைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி உலோகம், எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட துறைகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

இஸ்ரேல் - ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெயின் விலை 3.36 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரலுக்கு 114.95 டாலர் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து 94.44 என உள்ளது.

summary

Stock Market: Sensex sinks 990 points, Nifty tests 22,500; bank, financial drag

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.