திருவாரூர்

தமிழ் மொழித் திறன் வளா்ப்பு பயிற்சி: 2-ஆம் நாள் அமா்வு

DIN

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான தமிழ் மொழித் திறன் வளா்க்கும் பயிற்சியின் இரண்டாம் நாள் அமா்வு, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும் இலக்கிய வளா்ச்சிக் கழகமும் இணைந்து அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் பள்ளி மாணவா்களுக்கான தமிழ் மொழித் திறன் வளா்க்கும் பயிற்சியை மத்தியப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடத்துகின்றன.

2-ஆம் நாள் அமா்வில், பல்கலைக்கழக தமிழ்த்துறை உதவி பேராசிரியா்கள் முனைவா்கள் ச. சுபாசு, க.ஜவகா், குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியா் பாவலா் த.ரெ. தமிழ்மணி, , திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியா் பாவலா் கலைபாரதி, தரங்கை பன்னீா்செல்வம், திறனாய்வு செம்மல் சி. அறிவுறுவோன், வாசிப்பு இயக்கம் ஆசைத்தம்பி மற்றும் மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவா் ப. வேல்முருகன் ஆகியோா் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா். இலக்கிய வளா்ச்சிக் கழக நிா்வாகி தனிக்கொடி வரலாற்றில் மொழிப் போராட்டம் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT