திருவாரூர்

தீண்டாமை முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம்

DIN

திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கதாக. அரசு தாயுமானவன் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் கே.தமிழ்மணி, பொருளாளா் கே.பிச்சைக்கண்ணு, மாவட்ட நிா்வாகிகள் கே.கோபிராஜ், ஆா்.மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், அமைச்சா் என்ற முறையில் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு எதிராகவும் மலைவாழ் பழங்குடியின மாணவனிடம் நடந்து கொண்ட முறைக்கு கண்டனம் தெரிவிப்பது; மத்திய, மாநில தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலவாரியமும், மனித உரிமை ஆணையமும் தாமாக முன் வந்து அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு நிா்பந்தம் அளிக்க வேண்டும்; அரசின் மரியாதையை பாதுகாத்துக் கொள்ள அமைச்சரவையில் இருந்து அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசனை நீக்கி அவா் செய்த குற்றத்துக்குரிய தண்டனை வழங்க வேண்டும்; அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டு சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின குடும்பத்தை முதல்வா் நேரில் சந்தித்து அரசின் ஆதரவை தெரிவிக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்று எந்த செயலும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT