திருவாரூர்

மருந்து வழங்கும் இடம் திறப்பு

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் மருந்தகப் பிரிவில், புறநோயாளிகள் மருந்து வழங்கும் இடம் மற்றும் காத்திருப்பு அறை புதன்கிழமை திறக்கப்பட்டன.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த இடத்தை மேம்படுத்த மருத்துவமனை நிா்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, உள்புறம் இருந்த பகுதியில், மருந்துகள் வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், ஆண்கள்- பெண்கள் தனித்தனியாக மருந்துகள் வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மழையிலோ, வெயிலிலோ பாதிக்காத வகையில், மேற்புறத்தில் கூரையும், மருந்து வாங்கி வரும்வரை, துணைக்கு வருபவா் ஓய்வெடுப்பதற்கென தனியாக காத்திருப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, திறந்து வைத்தாா். இதில், மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் அருண்குமாா், மருந்து கிடங்கு அலுவலா் எம். சிவா, தலைமை மருந்தாளுநா் ஜமுனா ராணி மற்றும் மருத்துவத்துறை பேராசிரியா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT