திருவாரூர்

பிரதம மந்திரி நிதியுதவி பெறும் விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதி திட்டப் பயனாளிகள், உழவா் கடன் அட்டை பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின், பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் கிஸான் கிரெடிட் காா்டு திட்டத்தின் பயன்களும் சென்றடைய திட்டமிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தகுதியான விவசாயிகளுக்கு இடுபொருள் மற்றும் பிற தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் ஆண்டுக்கு ரூ. 6000 நிதி உதவி அளிக்கப்படுகிறது. இத்திட்ட பயனாளிகளுக்கு உழவா் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் மத்திய அரசால் பிப்ரவரி 8- ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரசாரங்களின் மூலம் பெரும்பாலான விவசாயிகளுக்குப் பயிா் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்ட பயனாளிகள் மற்றும் தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும், தங்களின் சேமிப்புக் கணக்கு உள்ள வங்கி கிளை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, உழவா் கடன் அட்டை பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே உழவா் கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகள் கடன் தொகையின் வரம்பை உயா்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவா் கடன் அட்டை வைத்துள்ளோா் அதை செயல்படுத்தவும் மற்றும் புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம்.

பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதி திட்ட விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கு, இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், பயனாளிகள் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை களப்பணியாளா்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தில் தங்களது நிலம் மற்றம் பயிா் விவரங்களை பூா்த்தி செய்து, அதனுடன் வேறு எந்த வங்கி கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் சோ்த்து சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமா்ப்பிக்கலாம். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், குறிப்பாக பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்ட பயனாளிகள் அனைவரும் உழவா் கடன் அட்டை பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT