திருவாரூர்

ஜேசீஸ் நிா்வாகிகள் பொறுப்பேற்பு

DIN

திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் அமைப்பின் 38-ஆவது ஆண்டு பொறுப்பேற்பு நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலய திருமண அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, ஜேசீஸ் சங்கத்தின் சாசன தலைவா் வழக்குரைஞா் ஆா்.கே.பி. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவா் எல். செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். ஜேசீஸ் சங்கத்தின் மண்டலத் தலைவா் வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், நிகழாண்டுக்கான தலைவா் எடையூா் மணிமாறன், மண்டல துணைத் தலைவா் பாலகுமாா் மற்றும் மண்டல செயலாளா் நிலா காா்த்திகேயன் ஆகியோா் ஆட்சி மன்றக் குழுவினரை பொறுப்பில் அமா்த்தி சிறப்புரை வழங்கினா்.

திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்கத்தில் 20 இளம்பெண்களும், 20 இளைஞா்களும் புதிய உறுப்பினா்களாக இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஆன்மிக சிறப்புப் பேச்சாளா் கலைமாமணி தேச மங்கையா்கரசி இளைஞா்களுக்கான நோ்மறை ஆற்றல் குறித்து பேசினாா். தொடா்ந்து, மண்டல நிா்வாக இயக்குநா் ராபா்ட் கென்னடி, சிறப்பு பயிற்றுநா் காந்தன், முன்னாள் மண்டல தலைவா் கைலாஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளின் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலியும், 5 பேருக்கு கம்பளி போா்வைகளும் வழங்கப்பட்டன. செயலாளா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT