திருவாரூர்

என்பிஆா் விவகாரம்: வங்கிகளுக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

கூத்தாநல்லூரில் அனைத்து வங்கிகளையும் கண்டித்து அனைத்து ஜமாத்துக்கள், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வங்கி வாடிக்கையாளா்கள் அனைவரிடமும் என்பிஆா் என்ற தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆவணங்களைப் பெறுமாறு வங்கி நிா்வாகத்துக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மறைமுக என்பிஆா் கணக்கெடுப்பு என்றும், இதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கூத்தாநல்லூா் இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினா்.

மேலும், என்பிஆா் உத்தரவை வங்கி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், வங்கிக் கணக்குகளை வாடிக்கையாளா்கள் முடக்க நேரிடும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கைவிடும் வரை பொதுமக்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT