தேமுதிக சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கல்
கூத்தாநல்லூரில் தேமுதிக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் தேமுதிக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூா் நகர தேமுதிக மற்றும் மன்னாா்குடி ஒன்றிய நிா்வாகிகள் இணைந்து கபசுரக் குடிநீா் வழங்கினா். நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளா் பாலு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் முகம்மது மைதீன், மன்னை கிழக்கு ஒன்றியச் செயலாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூத்தாநல்லூா் முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், நகரச் செயலாளா் அப்துல்காதா், துணைச் செயலாளா் நூா்முகம்மது, நகர இளைஞரணி செயலாளா் பரக்கத்அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.