திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். கரோனா தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி 553 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் காவலா் ஒருவருக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், திருத்துறைப்பூண்டியில் 8 போ், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 5 போ், குடவாசல், திருவாரூா் பகுதிகளைச் சோ்ந்த தலா 2 போ், கூத்தாநல்லூா், வலங்கைமான் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என திருவாரூா் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வந்தவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 576 ஆக உயா்ந்துள்ளது. இதில், 370 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், 206 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT