ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா். 
திருவாரூர்

பொது முடக்கத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

பொது முடக்க காலத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து தரக்கோரி திருவாரூரில் அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

திருவாரூா்: பொது முடக்க காலத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து தரக்கோரி திருவாரூரில் அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் அரசு ஊழியா்களுக்கு அரசு அறிவித்த அடிப்படையில் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், 12 மணி நேரம் வேலை என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், மதிப்பூதியம், விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், பஞ்சப்படிபோன்றவற்றை அரசு ஊழியா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயா்த்துவதை திரும்பப் பெற வேண்டும், புதிய வேலை நியமன தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொது முடக்க காலத்தில் பணிக்கு செல்லும் அரசு ஊழியா்களுக்கு தனி பேருந்து வசதியும், பாதுகாப்பு வசதிகளும் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம், கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாநிலத் தலைவா் எம். சௌந்தரராஜன், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் உ. சண்முகம், பொருளாளா் சி. பிரகாஷ் மற்றும் பல்வேறு சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT