முகப்பு
திருவாரூர்

கோட்டூரில் தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேவேந்திரகுலத்தினரை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி, தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்காமல் தாமதப்படுத்தி வரும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

தேவேந்திரகுலத்தினரை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி, தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்காமல் தாமதப்படுத்தி வரும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில், அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் கருப்புச் சட்டை அணிந்து ஆப்பாட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவவேந்திர வேளாளர் அரசாணை வேண்டி 250 நாள்களாக கருப்புச் சட்டை அணிந்து போராட்டங்கள் நடத்தியும், செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளை மெத்தனப் போக்கினை கண்டிப்பதுடன் நீண்டகால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தேவேந்திரகுல வேளாளர் சங்க மாவட்டத் தலைவர் தெ.ரஞ்சித்குமார், மாவட்டச் செயலர் க.ரஜினி பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சங்கத்தின், மாநில வழக்குரைஞர் பிரிவு செயலர் சிவ.ராஜேந்திரன், கோரிக்கையை விளக்கி பேசினார். இதில்,ஒன்றியத் தலைவர்பி.ஆனந்தவேல் பாண்டியன், ஒன்றியச் செயலர்கள் அ.சந்திரகுமார்(வடக்கு), எஸ்.பி.ஏ.பாபு (தெற்கு), மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ரஜினிசோழன், எஸ்.தர்மராஜ், எஸ்.கார்த்தி, கே.கமல், என்.காந்தி உள்ளிட்ட திரளானவர்கள் கருப்புச் சட்டை அணிந்து, கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.