கரோனா மையம்: மத்தியப் பல்கலை.யில் ஆட்சியா் ஆய்வு
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறந்திட ஏதுவாக மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறந்திட ஏதுவாக மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம் வட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி, மாணவ, மாணவியா் தங்கும் விடுதிகளில் உள்ள 120 அறைகளில், தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா சிறப்புச் சிகிச்சை மையம் திறப்பதற்காக மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா் ஜெயப்பிரீதா, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா். மத்தியப் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு கட்டடத்தில் 120 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.