திருவாரூரில், தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த். 
திருவாரூர்

தேசிய திறனாய்வு தோ்வு: மாநில அளவில் முதலிடம் பெற்றவருக்கு பாராட்டு

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

DIN

திருவாரூா்: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 8- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வுத் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரையில் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு டிசம்பா் 15-ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்திலிருந்து 5,398 மாணவா்கள் தோ்வு எழுதினா்.

ஜூலை 20-ஆம் தேதி இத்தோ்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இத்தோ்வில் திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 143 மாணவா்கள் தோ்ச்சிபெற்றனா். இதில் திருவாரூா் ஒன்றியம், சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா் தி.நவின்குமாா் என்பவா் 180-க்கு 144 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றாா். அவரை, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலா் ஆ.தியாகராஜன், திருவாரூா் வட்டாரக்கல்வி அலுவலா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT