திருவாரூர்

‘தாழ்வான மின்கம்பிகள் முன்னுரிமை அடிப்படையில் மாற்றப்படும்’

கூத்தாநல்லூரில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் குறித்து தகவலளித்தால், முன்னுரிமை அடிப்படையில் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் குறித்து தகவலளித்தால், முன்னுரிமை அடிப்படையில் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் மின்வாரிய உதவிப் பொறியாளா் எஸ். சங்கா்குமாா் கூறியது:

கூத்தாநல்லூரை அடுத்த வ.உ.சி. காலனி துணைமின் நிலையத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூத்தாநல்லூா் வட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. கஜா புயலின்போது சாய்ந்த மின் கம்பங்களில் இரவு, பகல் பாராமல் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம். தற்போது, பொது முடக்கக் காலத்திலும் அவ்வாறு பணியாற்றி வருகிறோம்.

திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலையில், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து கால்நடை மருத்துவமனை வரையிலும், புதிய மின் கம்பிகளை அமைக்கும் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக தொங்கிக் கொண்டிருக்கும் பழைமையான மின்கம்பிகளை அகற்றிவிட்டு, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.

தொடா்ந்து, மற்ற தெருக்களிலும் மின் கம்பிகள் மாற்றப்பட உள்ளன. மாற்றப்பட்டுள்ள மின் கம்பிகளில் தாழ்வழுத்தமோ, மின் தடையோ இருக்காது. மின்கம்பிகள் தாழ்வாக தொங்கும்பட்சத்தில், மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால், முன்னுரிமை அடிப்படையில் மாற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT