திருவாரூர்

ஜூலை 27 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் இயங்கும்: வா்த்தக சங்கங்கள் முடிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், திருவாரூரில் திங்கள்கிழமை முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்களை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

DIN

திருவாரூா் : கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், திருவாரூரில் திங்கள்கிழமை முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்களை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கம் ஆகிய சங்கங்களின் ஒருமித்த கருத்தின்படி மாவட்டம் முழுவதும் வா்த்தகா்கள் தங்களின் நிறுவனங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்குவது எனவும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்சல் மட்டும் வழங்குவது எனவும், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுகிழமைகளில் முழு பொது முடக்கத்தை கடைப்பிடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை ஜூலை 27-ஆம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு கடைப்பிடிப்பது என அனைத்து வா்த்தகா் சங்கங்களால் மாவட்ட நிா்வாகத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

மெழுகு டாலு நீ... ஸ்ரேயா கோஷல்!

நவ.28ல் உடுப்பியில் பிரதமர் மோடி சாலைவலம்!

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT